ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் அருகே ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி மாவட்டங்களில் கடந்த 12 நாட்களில் 136 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று, ரியாசி மாவட்டம் கட்ரா பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் அருகே ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். பாதுகாப்புப் படையினர், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாசி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.